Map Graph

ஜவஹர் நவோதயா வித்யாலயா, புதுச்சேரி

ஜவஹர் நவோதயா வித்யாலயா, புதுச்சேரி அல்லது உள்ளூரில் ஜெ.என்.வி. காலாபேட்டை எனப்படுவது உறைவிட இருபாலர் பள்ளியாகும். இது இந்தியாவின் புதுச்சேரி ஒன்றியத்தில் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள நடுவண் அரசின் கல்வி நிறுவனமாகும். நவோதயா வித்யாலயாக்கள் இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் நடத்தப்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது நவோதயா வித்யாலயா ஸ்மிதியால் நிர்வகிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான திறமையான குழந்தைகளுக்கு நவோதயா வித்யாலயாக்கள் இலவசக் கல்வியை வழங்குகின்றன.

Read article